ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் மண்சரிவு

-க.கிஷாந்தன்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.

எனினும் வீதி போக்குவரத்து அதிகார சபையினர் மண்சரிவை அகற்றும் பணியில் ஈடுப்பட்டதன் பின் இன்று காலை முதல் அவ்வீதியினூடான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.

கினிகத்ஹேனை தியகல பகுதியில் பாதை அபிவிருத்தி அதிகார சபையினரால் நிர்மாணிக்கப்படும் மண்மேடுப்பகுதியே இவ்வாறு சரிந்த வண்ணம் காணப்படுகின்றது.

சீரற்ற காலநிலையினால் 06.06.2018 அன்று மாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினையடுத்தே இந்த மண்சரிவு ஏற்பட்டிருந்தது.

இந்த மண்சரிவு காரணமாக அட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் கண்டி பிரதான வீதிகளுடான போக்குவரத்து நேற்று மாலை முதல் பாதிக்கப்பட்டிருந்தது.

மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் இருப்பதனால், மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்தவகையில் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வரும் வாகனங்கள் கலுகல வீதியினை பயன்படுத்துமாறும், ஹட்டனிலிருந்து செல்லும் வாகனங்கள் தியகல – நோர்ட்டன் வீதியினை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.

தொடர்ந்தும் மலையக பகுதிக்கு மழை பெய்து வருவதனால் வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் மண்சரிவு ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் மண்சரிவு Reviewed by Vanni Express News on 6/08/2018 04:51:00 PM Rating: 5