நேற்றிரவு தென்பட்ட மிக நீண்ட சந்திர கிரகணம்

100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் நேற்றிரவு தென்பட்டுள்ளது. 

இதன்படி, இந்த முழுமையான சந்திர கிரகணம் நேற்று 27 ஆம் திகதி இரவு முதல் இன்று 28 ஆம் திகதி அதிகாலை வரை சுமார் 06 மணித்தியாலங்களும் 14 நிமிடங்கள் தென்பட்டுள்ளன. 

நேற்று இரவு 10.45 மணியளவில் ஆரம்பமான சந்திர கிரகணம் இன்று அதிகாலை 04.58 மணி வரை நீடித்துள்ளது. 

அதேவேளை ஆசியா, ஐரோப்பா அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகள் உட்பட உலகின் பல்வேறு பாகங்களிலும் இந்த சந்திர கிரணம் அவதானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு தென்பட்ட மிக நீண்ட சந்திர கிரகணம் நேற்றிரவு தென்பட்ட மிக நீண்ட சந்திர கிரகணம் Reviewed by Vanni Express News on 7/28/2018 02:25:00 PM Rating: 5