சுங்க திணைக்கள அதிகாரிகள் 5 பேரை தாக்கிய சம்பவம் - குவைத் நாட்டு தம்பதிக்கு பிணை

சுங்க திணைக்கள அதிகாரிகள் 5 பேரை கட்டுநாயக விமானநிலையத்தில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குவைட் நாட்டில் இருந்து வருகைத்தந்த வெளிநாட்டவர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையே அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுங்க திணைக்கள அதிகாரிகள் 5 பேரை தாக்கிய சம்பவம் - குவைத் நாட்டு தம்பதிக்கு பிணை சுங்க திணைக்கள அதிகாரிகள் 5 பேரை தாக்கிய சம்பவம் - குவைத் நாட்டு தம்பதிக்கு பிணை Reviewed by Vanni Express News on 7/28/2018 05:41:00 PM Rating: 5