இலங்கை விமானப் பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக இ காட் முறை

பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக இந்த இ காட் முறை அமுல்படுத்தப்படவிருப்பதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்குப் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பொருட்டு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் மற்றும் குடியகல்வு குடிவரவு அமைச்சின் அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

கட்டுநாயக்க விமான சேவைகள் அதிகாரசபையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் இதற்கென விமான நிலையத்தில் அமைக்கப்படும் இ-கேட்டைப்பயன்படுத்தி விமான நிலைத்திற்குள் பிரவேசிக்க முடியும், விமான நிலையத்தில் இருந்து துரிதமாக வெளியேறவும் முடியும். உள்நாட்டு விமானப் பயணங்களை ஆரம்பிக்கத் தேவையான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன. 

நேபாளத்தைப் போன்று வளர்ச்சி கண்ட உள்நாட்டு விமானசேவையை ஆரம்பிப்பது இலக்காகும். இதற்கான வசதிகளும், ஒடுபாதைகளும் ஏற்படுத்பத்தப்பட இருக்கின்றன. மட்டக்களப்பு, சிகீரிய போன்ற பிரதேசங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானசேவை ஆரம்பிக்கப்பட இருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை இ-பாஸ்போட் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென விசேட குழுவும் அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஏற்பட்ட தாமதித்தினால் இந்த இ காட் (நு – ஊயசன) முறைமை அறிமுகக்படுத்தப்படுகிறது என்றும் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப் பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக இ காட் முறை இலங்கை விமானப் பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக இ காட் முறை Reviewed by Vanni Express News on 7/26/2018 03:38:00 PM Rating: 5