சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி - மூவர் வைத்தியசாலையில்

சிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் கீரியங்கள்ளி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இன்று (24) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மஸ்கெலிய பகுதியை சேர்ந்த ஆறுமுகம் எனும் 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இயந்திர கோளாறு காரணமாக பாதை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது பின்னால் வந்த சிறிய ரக லொறி ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சிறிய ரக லொறியின் முன்னாள் இருந்து சென்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அதே லொறியில் பயணித்த ஏனைய மூவரையும் முந்தலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லொறி ஓட்டுனரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்னால் உள்ள ஔி விளக்குகள் போடப்படாமல் இருந்த காரணத்தால் தான் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்து தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி - மூவர் வைத்தியசாலையில் சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி - மூவர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 7/24/2018 04:28:00 PM Rating: 5