அம்பாறை - கல்முனை பிரதான வீதியில் விபத்து - கணவனும் மனைவியும் பலி

அம்பாறை - கல்முனை பிரதான வீதியின் வலதாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். 

மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனம் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் பலத்த காயமடைந்த வேனின் ஓட்டுனர், அவருடைய மனைவி மற்றும் உறவினர் ஒருவரை அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். 

மஹன்போக, ஹத்திஸ்ஸ பகுதியை சேர்ந்த 56 வயதுடைய கணவரும் 45 வயதுடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை - கல்முனை பிரதான வீதியில் விபத்து - கணவனும் மனைவியும் பலி அம்பாறை - கல்முனை பிரதான வீதியில் விபத்து - கணவனும் மனைவியும் பலி Reviewed by Vanni Express News on 7/29/2018 02:34:00 PM Rating: 5