பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி விபத்தில் பலி

கிளிநொச்சி, ஏ9 வீதியில் உமையாள்புரம் பகுதியில் பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் உமையாள்புரம் பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் யதுர்சா எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் 

இன்று (03) காலை 7.15 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தாயுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை தாய், பாடசாலைக்கு அருகில் உள்ள பாதசாரிகள் கடவையில் இறக்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார். 

இதன் போது பாதசாரிகள் கடவையை குறித்த மாணவி கடக்க முற்பட்ட போது கிளிநொச்சி பக்கத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் ஒன்று குறித்த மாணவயை மோதியுள்ளது. 

உடனடியாக குறித்த வாகனத்திலேயே மாணவியை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றிருந்த போதும் மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்த மாணவி குடும்பத்தில் ஒரேயொரு பெண் பிள்ளை என தெரிவிக்கப்படுவதுடன், சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, வாகன சாரதியையும் கைது செய்துள்ளனர். 
பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி விபத்தில் பலி பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி விபத்தில் பலி Reviewed by Vanni Express News on 7/03/2018 06:30:00 PM Rating: 5