இன்று காலை நடந்த கோரவிபத்து இரண்டு மாணவர்கள் பலி

தெவுந்தர - ஹக்மன வீதியில், பிட்டவல்கமுவ பிரதேசத்தில் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 

பஸ் வண்டி ஒன்றும் எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் நரவல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். 

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 19 வயதுடைய இரண்டு மாணவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

பிரேதம் தொடர்பான பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இன்று காலை நடந்த கோரவிபத்து இரண்டு மாணவர்கள் பலி இன்று காலை நடந்த கோரவிபத்து இரண்டு மாணவர்கள் பலி Reviewed by Vanni Express News on 7/04/2018 04:28:00 PM Rating: 5