மாமாவுடன் முன்பள்ளிக்கு சென்ற 4 வயது சிறுவன் விபத்தில் பலி - சோக சம்பவம்

குளியாப்பிட்டிய - மாதம்பை கச்சேரி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குளியாப்பிட்டிய, வல்லம பகுதியை சேர்ந்த எச்.எம் மெத்விர குணவர்தன எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

நேற்று (04) காலை 8.30 மணியளவில் குறித்த சிறுவன் மாதம்பையில் இருந்து குளியாப்பிட்டிய திசையில் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் முன்பள்ளிக்கு சென்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், பிரதான வீதிக்கு லொறி ஒன்றை திருப்ப முற்பட்ட போது குறித்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் குறித்த சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மாமா பலத்த காயங்களுடன் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டு இன்று (05) நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாமாவுடன் முன்பள்ளிக்கு சென்ற 4 வயது சிறுவன் விபத்தில் பலி - சோக சம்பவம் மாமாவுடன் முன்பள்ளிக்கு சென்ற 4 வயது சிறுவன் விபத்தில் பலி - சோக சம்பவம் Reviewed by Vanni Express News on 7/05/2018 05:44:00 PM Rating: 5