வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

ஏறாவூர் கொரகல்லிமடு வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அந்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 30 வயதுடைய பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

ஓபநாயக மிதல்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் பொலிஸ் உத்தியோகத்தர் பலி வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் பொலிஸ் உத்தியோகத்தர் பலி Reviewed by Vanni Express News on 7/06/2018 04:32:00 PM Rating: 5