அதி வேகமாக பயணித்த கார் விபத்து - 2 பேர் வைத்தியசாலையில்

பாணதுறையில் இருந்து பண்டாரகம நோக்கி அதி வேகமாக பயணித்த கார் ஒன்று, இன்று (24) அதிகாலை 4.30 மணி அளவில் விபத்துக்குள்ளானது. 

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன கார், 6 அடி ஆழமான சிறிய நீரோடை ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தின் போது 3 இளைஞர்கள் காரின் உள்ளே இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

காரின் சாரதியை தவிர ஏனைய 2 பேரும் காயமடைந்த நிலையில் பாணதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். à®µà¯‡à®•à®¤à¯à®¤à¯ˆ கட்டுப்படுத்த முடியாது விபத்துக்குள்ளான கார்

அதி வேகமாக பயணித்த கார் விபத்து - 2 பேர் வைத்தியசாலையில் அதி வேகமாக பயணித்த கார் விபத்து - 2 பேர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 7/24/2018 11:32:00 PM Rating: 5