பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமது அதிகாரிகள் செயற்படுவதில்லை

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை தரும் பகுதியில் குடிவரவு, குடியகல்வு கருமபீடத்தில் அதிகாரிகள் இருப்பதில்லை என்று சமூக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தியை மறுப்பதாகவும், ஒருபோதும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமது அதிகாரிகள் செயற்படுவதில்லை என்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாரச்சி கூறினார். 

பயணிகள் வருகை தரும் கருமபீடத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் இருப்பதில்லை என்று சமூக ஊடகங்களில் வௌியாகிய செய்திக்கு விளக்கமளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஒருசில விமானங்கள் ஒரே நேரத்தில் வரும் போது சற்று நெரிசல் நிலை ஏற்படுவதாகவும், எனினும் நிலமையை கையாள்வதற்கு தேவையான அதிகாரிகள் இணைக்கப்படுவதாகவும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாரச்சி கூறினார்.
பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமது அதிகாரிகள் செயற்படுவதில்லை பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமது அதிகாரிகள் செயற்படுவதில்லை Reviewed by Vanni Express News on 7/04/2018 10:55:00 PM Rating: 5