குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில் 5 சுங்க அதிகாரிகள் வைத்தியசாலையில்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளை குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில், 5 சுங்க அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தமது செல்லப் பிராணியான நாய் குட்டி ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து அது இறுதியில் கைகலப்பில் நிறைவடைந்துள்ளது. 

மேலும், இன்று (27) காலை இலங்கைக்கு வருகை தந்த குவைத் நாட்டு தம்பதிகள், இலங்கையின் விலங்கு கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைக்கு இணங்க எதுவித தயார் நிலையில் வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் காயமடைந்த பிரதி பணிப்பாளர், பெண் ஊழியர் உள்ளிட்ட 5 சுங்க அதிகாரிகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில் 5 சுங்க அதிகாரிகள் வைத்தியசாலையில் குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில் 5 சுங்க அதிகாரிகள் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 7/27/2018 11:30:00 PM Rating: 5