நிலையான அபிவிருத்திகளை ஏற்படுத்தி மக்கள் மனங்களில் அரண்களாக இருப்போம்

-வாமதேவன் தயாளன்

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட சரவணை கிராமப்பகுதியில் தெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை நேற்று காலை 9.30 மணியளவில் விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

விவசாய பிரதி அமைச்சராக உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை நேற்றுமுன்தினம் பொறுப்பேற்றிருந்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கு அபிவிருத்தி சார்ந்த விடயங்களை முன்னேடுப்பதர்க்கான பிரதேச கள விஜயமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கமநலஅபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் பிரதேச விவசாய பெருமக்கள்,என பலரினதும் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளாக காணப்பட்டிருந்த நிலையில், நம்பிக்கையுடன் கலந்து கொண்டிருந்தனர். 

கிராம மக்கள் குளங்களினால் பல்வேறு விவசாய ரீதியான நன்மைகளை அனுபவித்திருந்தனர் எனவும் விவசாய அமைச்சராகவும் தனது கடமைகளை வழங்க முழு ஆதரவை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டமையை முன்பு இருந்த விவசாய காலப்பகுதியினை விட மக்களின் குறிப்பாக வடகிழக்கு மக்களின் நம்பிக்கைகளை கட்டிஎளுப்பக்கூடிய நம்பிக்கையை விதைத்திருப்பதாகவும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

மக்களின் குறைகளை அபிவிருத்தி குளுகூட்டதின் போது விவாதித்து விமர்சனங்களை எழுப்புவதை விட ஆக்கபூர்வமான சிந்தனைகளுடன் கிராமத்தை கட்டிஎளுப்புவோம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார். 

நாரந்தனை வேம்படிக்ககுளம், கொக்கிழச்சிபதி, பெரியமண்குழி புனரமைப்பு தொடர்பாகவும் கள விஜயத்தை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
நிலையான அபிவிருத்திகளை ஏற்படுத்தி மக்கள் மனங்களில் அரண்களாக இருப்போம் நிலையான அபிவிருத்திகளை ஏற்படுத்தி மக்கள் மனங்களில் அரண்களாக இருப்போம் Reviewed by Vanni Express News on 7/13/2018 04:09:00 PM Rating: 5