விவசாயிகளின் உணர்வுகளை மனதளவில் உணரும் தமிழ் அமைச்சர்

-வாமதேவன் தயாளன்

கௌரவ விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் மூளாய் நெடுங்குளம் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பிரதாயபூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.தொல்புரம் கமநல சேவை நிலையத்திர்க்குட்பட்ட 160 விவசாய குடும்பங்கள் வசிப்பதோடு அவர்களும் பயனடையக்கூடியதாகவும் நெடுங்குளம் காணப்படுகின்றது.

விவசாயிகளின் உணர்வுகளை மனதளவில் உணரும் தமிழ் அமைச்சர் தமக்கு கிடைத்தமை உணர்வுபூர்வமாக இருக்கின்றதெனவும் விவசாயிகளினுடைய சந்திப்புக்களின் பொழுது அவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருந்தனர் 

இந்த நிகழ்வில் கமநல உதவி ஆணையாளர்,சங்கானை பிரதேச செயலாளர்,மூளாய் பொன்னாலை விவசாய சம்மேளன தலைவர்,தொல்புரம் கமநல சேவை உத்தியோகத்தவர்கள் கிராம விவசாய பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டதோடு,விவசாய பெருமக்களாக வாழ்வதற்கு தமது குறைகளை நிறைகளாக்க தமிழ் விவசாய அமைச்சரோடு மனதளவில் புரிந்து கொள்ள கூடிய முறையில் மக்களும், மானசீககொள்கையோடு தனது பணிகளை மேற்கொள்ளும் விவசாய அமைச்சரோடு கைகோர்த்து பயணிக்க தயார் எனவும் தெரிவித்தனர்.

விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் இளைஞர்களை விட தமது வகிபாகம் அதிகம் எனவும்,இக்கால இளைஞர்களும் விவசாயத்தை மேற்கொள்ள இளைஞர் விவசாய அமைப்புக்களை நிறுவ வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியதோடு இளைய அமைச்சரினால் அவற்றை சாதிக்க முடியும் எனவும் தமது ஒத்துழைப்புக்களும் இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டனர் இதேவேளை என்னோடு பயணிக்கும் இளைஞர் யுவதிகளை போன்று விவசாய பணிகள் ஊடாக விவசாய மக்களின் மனதளவில் இடம்பிடித்துள்ளமை மகிழ்ச்சி எனவும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்தார்..36 லட்சம் ரூபா புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் உணர்வுகளை மனதளவில் உணரும் தமிழ் அமைச்சர் விவசாயிகளின் உணர்வுகளை மனதளவில் உணரும் தமிழ் அமைச்சர் Reviewed by Vanni Express News on 7/13/2018 11:33:00 PM Rating: 5