15 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது

15 வயதுடைய சிறுமி ஒருவரை அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயதுடைய இளைஞனை மாதம்பை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனன்குளம், வாளஹேன பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான். 

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும் குறித்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை வேறு திருமணம் செய்து கொண்டு பிரிந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது. 

சந்தேக நபரான இளைஞனுக்கும் குறித்த சிறுமிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பாட்டி வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்து செல்வதாக பாட்டிக்கு தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பாட்டி விசாரித்த போது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்தமை தெரிய வந்துள்ளது. 

பின்னர் பாட்டி சிறுமியையும் அழைத்துச் சென்று மாதம்பை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். 

6 மாத காலங்களாக தானும் சந்தேக நபரான இளைஞனும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக குறித்த சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். 

குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது 15 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது Reviewed by Vanni Express News on 7/18/2018 05:15:00 PM Rating: 5