ஜீப் வாகனத்தில் வந்த குழு மிளகாய் தூளை வீசி பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் - இருவர் கைது

புளத்சிங்கள பிரதேசத்தில் மிளகாய் தூளை வீசி தாக்கிவிட்டு பணக் கொள்ளை நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தன்னியக்க இயந்திரத்திற்கு நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்ட சுமார் 20 மில்லியன் ரூபா பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் குறித்த தனியார் நிறுவனத்தின் வாகன ஓட்டுனரையும் பாதுகாப்பு அதிகாரியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

புளத்சிங்கள - ஹொரண வீதியின் பஹல நாரகல பகுதியில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பணத்தை எடுத்துச்சென்ற மோட்டார் வாகனம் உணவு உற்கொள்வதற்காக விற்பனை நிலையமொன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ஜீப் வாகனம் ஒன்றில் வந்த ஒரு குழு மிளகாய் தூளை வீசி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 

பணத்திற்கு பாதுகாப்பிற்காக வந்த பாதுகாப்பு அதிகாரி கொள்ளை சம்பவம் இடம்பெற்ற சந்தர்பத்தில் தனது துப்பாக்கியை எடுத்துவரவில்லை என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதனடிப்படையில் கொள்ளைக்காரர்களுக்கு உதவிய குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜீப் வாகனத்தில் வந்த குழு மிளகாய் தூளை வீசி பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் - இருவர் கைது ஜீப் வாகனத்தில் வந்த குழு மிளகாய் தூளை வீசி பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் - இருவர் கைது Reviewed by Vanni Express News on 7/29/2018 04:57:00 PM Rating: 5