மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெறுவதற்கு முயற்சித்த பெண் கைது

மரண அச்சுறுத்தல் விடுத்து 100,000 ரூபா கப்பம் பெறுவதற்கு முயற்சித்த பெண் ஒருவர் அம்பலாங்கொட, பலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

பலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கோரிய கப்பத் தொகையில் 50,000 ரூபாவை பெற்றுக் கொள்ளும் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஒபடவத்தை, பெந்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இன்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெறுவதற்கு முயற்சித்த பெண் கைது மரண அச்சுறுத்தல் விடுத்து  கப்பம் பெறுவதற்கு முயற்சித்த பெண் கைது Reviewed by Vanni Express News on 7/03/2018 05:50:00 PM Rating: 5