20,000 ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட சீன நாட்டவர் கைது

அகுணுகொலபெஸ்ஸ மகாவலி பிரதேச அலுவலகத்தின் முகாமையாளருக்கு 20,000 ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட சீன நாட்டவர் ஒருவரை குறித்த அதிகாரிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இன்று (30) காலை கல்குவாரி ஒன்றிற்கு அனுமதி பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் வழங்க முற்பட்ட போது குறித்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடம் அகுணுகொலபெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அகுணுகொலபெஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
20,000 ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட சீன நாட்டவர் கைது 20,000 ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட சீன நாட்டவர் கைது Reviewed by Vanni Express News on 7/30/2018 04:50:00 PM Rating: 5