பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் போதை மாத்திரைகளுடன் கைது


மாத்தளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை டெமடோல் எனும் போதை மாத்திரை ஒருதொகையுடன் மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த மாணவன் கொழும்பில் இருந்த போதை மாத்திரைகளை எடுத்து வந்து பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

மாத்தளை, உக்குவெல, ரைதலாவெல பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான். 

குறித்த மாணவனிடம் இருந்து 240 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மாத்தளை, ரைதலாவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த குறித்த மாணவனை பொலிஸார் சோதனையிட்ட போது அவனுடைய பாடசாலை பையில் இருந்து குறித்த போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

சந்தேக நபரை மாத்தளை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் போதை மாத்திரைகளுடன் கைது பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் போதை மாத்திரைகளுடன் கைது Reviewed by Vanni Express News on 7/31/2018 03:34:00 PM Rating: 5