இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்தே குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த மீனவர்கள் ஜகதாப் பட்டினம், தங்கட்சி மடம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்களின் இரண்டு படகுகள், மற்றும் ஏனைய உடமைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவர்களை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 இந்திய மீனவர்கள் கைது Reviewed by Vanni Express News on 7/05/2018 05:21:00 PM Rating: 5