சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டுடன் இருவர் கைது

கிளிநொச்சி - தர்மபுரம் - விசுவமடு பிரதேசத்தில் வலம்புரி சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர்களிடம் இருந்து வலம்புரி என்று சந்தேகிக்கப்படும் ட்ரய்டன் வகை அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. 

கொடிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். 
சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டுடன் இருவர் கைது சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டுடன் இருவர் கைது Reviewed by Vanni Express News on 7/13/2018 11:46:00 PM Rating: 5