மகனை காப்பாற்ற கணவனை பொல்லினால் அடித்து கொலை செய்த மனைவி கைது

தனது கனவனை பொல்லினால் தாக்கி கொலை செய்த மனைவியை நிவிதிகல காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 39 வயதான பெண் இரத்தினபுரி மேலதிக நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கணவர் தினந்தோறும் மதுபானம் அருந்திவிட்டு வந்து தொல்லைக்கொடுத்து வந்துள்ள நிலையில், சம்பவம் இடம்பெற்ற அன்று தனது இரண்டாவது மகனை தாக்கி கழுத்தை நெறித்து கொலை செய்ய முற்பட்டுள்ளதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன்போது மகனை காப்பாற்றுவதற்காக தனது கணவரை பொல்லினால் தாக்கியதாக மனைவி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் நிவிதிகல - பனஹெட்டகல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையென காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
மகனை காப்பாற்ற கணவனை பொல்லினால் அடித்து கொலை செய்த மனைவி கைது மகனை காப்பாற்ற கணவனை பொல்லினால் அடித்து கொலை செய்த மனைவி கைது Reviewed by Vanni Express News on 7/04/2018 11:45:00 PM Rating: 5