ஜனாதிபதி மிகப்பெரிய பொய்யர் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்லியிருக்கிறார்

-அஹமட் புர்க்கான் கல்முனை

துள்ளிக்குதித்து பேசுவதால் ஜனாதிபதி சொன்னது உண்மையாகிவிடாது. என்பதை நல்லாட்சியின் காவல் விலங்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசாத்சாலி அவர்கள்  புரிந்துகொள்ள வேண்டும். மட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களின் ஆட்சி இன்னும் சிறிது காலம் நீடிக்குமாக இருந்தால் நாட்டு மக்கள் உண்பதற்கு தவிட்டுக்கும் வழியில்லாமல் பசியால் இறந்து விடுவார்கள். எனவே வேகமாக "மைத்திரி பால சிறிசேன சர்வதேச மயானம்" ஒன்றை நிர்மாணிப்பதற்கு நீங்களும் உங்கள் ஜனாதிபதியும் முதலில் ஆயத்தமாகுங்கள்.

நல்லாட்சி ஆட்சிக்கு வந்த காலம் முதல் இன்றுவரை மஹிந்த ராஜபக்சவின் பெயரை உச்சரித்ததைவிட நீங்களும், உங்கள் ஜனாதிபதி சுயமாக செய்த அபிவிருத்தி அல்லது சாதனைகள்  ஏதாவது இருக்கிறதா? என்பதை பற்றி முடிந்தால் பேசுங்கள் வெறுமனே பொய்யான தகவல்களை பரப்பி மக்களை குழப்புவதனூடாக ஆட்சியை நீடிக்கச் செய்ய முடியும் என வீணாக மனக்கோட்டை கட்டாதீர்கள்.

மொரகாகந்த நீர்தேக்க நிர்மாண திட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

கடந்த 2007ம் ஆண்டு காலப்பகுதியில் மொரகாகந்த நீர்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது
அதற்கான நிதியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே வழங்கியிருந்தார்.

ஆனால் இந்த திட்டத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் எந்ததொடர்பும் இல்லை எனவும் மொரகாகந்த நீர்தேக்கத்தை திட்டத்திற்காக அர்பணிப்புடன் செயற்பட்ட
குலசிங்க அவர்களின் பெயரை வைத்து தாம் திறந்து வைப்பதாகவும் அந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.

இதன்மூலம் ஜனாதிபதி மிகப்பெரிய பொய்யர் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்லிக் காட்டியிருக்கிறார்.

கடந்த ஆட்சியில் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டதாக தொடராக கூறப்படுகின்ற குற்றச்சாட்டை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஏனெனில் மஹிந்த அரசாங்க காலத்தில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் உங்களைப் போன்றவர்கள் ஊடகங்களில் போட்ட கூச்சல்களை நம்பியே மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்தார்கள். அன்று மஹிந்த ஊடகங்களை சுயாதீனமாக இயங்க விடாமல் தடுத்திருந்தால் இன்றும் மகிந்த ராஜபக்ச அவர்களே ஜனாதிபதியாக இருந்திருப்பார். எனவே தொடர்ந்தும் மக்கள் முன் வந்து பொய்களை சொல்ல வேண்டாம்.

மட்டுமல்ல" மஹிந்த ராஜபக்ச சர்வதேச மயாணம்" மாத்திரமே இல்லை என கூறும் ஆசாத்சாலி அவர்களே! உங்கள் கருத்தின் மூலம் பார்த்தால் கூட மற்ற அனைத்தையும் மக்களுக்காக மஹிந்த செய்துள்ளார், என்றும் இப்போது அவர் செய்த அபிவிருத்திகளிளேயே நீங்களும் உங்கள் அரசாங்கமும் ஒழிந்து கொள்கிறீர்கள். என்றும் மக்களை வறுமை நிலைக்கு தள்ளி கொன்று குவிக்க நினைக்கும் உங்கள் அரசியல் கொள்கைக்கு மயாணம் ஒன்று இல்லாதபடியால், அதையும் மஹிந்த ராஜபக்ச அமைத்து வைத்திருந்தால் நல்லாட்சிக்கு  வேலை இலகுவாக முடிந்திருக்கும் என நீங்கள் கருதுவதாக நாங்கள் கொள்ளலாமா?
ஜனாதிபதி மிகப்பெரிய பொய்யர் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்லியிருக்கிறார் ஜனாதிபதி மிகப்பெரிய பொய்யர் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்லியிருக்கிறார் Reviewed by Vanni Express News on 7/26/2018 12:07:00 AM Rating: 5