ஆட்சி மாற்றமும் பின்புலமும்

-FAHMY MBM Mohideen-UK


நீண்டகால இருகட்சி ஆட்சிமுறைக்கு நேற்றைய பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் சாகுமணி அடித்துள்ளது..

ஊழலும் குடும்ப வாரிசு அரசியலும் பாகிஸ்தானின் இரும்புக்காலம் கரமாக இருந்தது..இந்தியா -பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பிரச்சனையை மையப்படுத்தியே சகல தேர்தல்களும் அரங்கேறியது.

இருந்தும் இடை இடையே இராணுவ ஆட்சியையும் ,,ஆட்சிக் கவிழ்ப்பும் ஐனநாயகத்திற்கு சவாலாக இருந்தது.உண்மையில் பாகிஸ்தான் நீதித்துறை ஆசியாவில் தலைசிறந்த சுயாதீன அமைப்பாகும். இதனால் பிரதமர் உற்பட பல தலைவர்களை அதிகாரத்தில் இருக்கின்ற நேரத்திலும் தண்டணை வழங்கியது..இது ஐனநாயகத்தின் உண்மைத் தன்மையை நிரூபித்தாலும்,இராணுவத்தின் அதிகாரம் எப்போதும் உச்சமாகவே உள்ளது. இதனை பலர் விமர்சித்தாலும் இந்தியாவின் அச்சுறுத்தல் ,ஊழல் கலந்த அரசியல் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றில் இருந்து நாட்டை பாதுகாக்க அவசியமாகவே பாகிஸ்தான் மக்களால் நோக்கப்படுகிறது.

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் இம்ரான்கான் கட்சிக்கு ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மையை வழங்கவில்லை..இருந்தும் 2002 தேர்தலில் 1 ஆசனத்தைப் பெற்ற கட்சி,இன்று 129 ஆசனங்கள் பெற்றிருப்பது சாதனையே...இந்தத் தேர்தலில் வாக்குகள் மற்றைய இருகட்சிகளுக்கும் ஓரளவு சரவாக இருந்ததால்,,நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் முறை இம்ரான்கானின் கட்சிக்கு சாதகமாக அமைந்து ஆசனங்களை அதிகரித்துள்ளது.

1-இரண்டு தேசியக்கட்சியிலும் வெளிநாட்டில் படித்த வாரிசுகளே களம் இறங்கினர்..இது அதிகளவான பழங்குடிகளும்,,கிராமப்புற மக்களிடமும்  செல்வாக்கைச் செலுத்தவில்லை.

2-மேலும் முஸ்லிம் அடிப்படைவாதம் மற்றும் ஆயுதக் குழுக்கள் தற்போது பாகிஸ்தானில் அதிக செல்வாக்கை செலுத்துகிறது..அறபு மற்றும் மத்திய கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற பல ஆட்சி மாற்றங்கள் ,,,பாகிஸ்தானின் சுயாதீன இறமை மற்றும் நாட்டுப் பற்று தொடர்பில் மக்களிடம் விசுவாசம் அதிகரித்துள்ளது ..இதனை இம்ரான்கான் மிகவும் நுட்பமாக கிராமப் புறங்களில் சாதகமான வேட்பாளர்களை நிறுத்திக் கையாண்டார்..

3-நகரப் புறங்களில் ஊழலையும் ,,பொருளாதார சீர்கேட்டையும் மட்டுமே பேசினார்..இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படித்த இளைஞர்கள் மற்றும் கல்விமான்களை வேட்பாளராகவும்,தேர்தல் பணிகளுக்காகவும் முன்னிலைப்படுத்தினார்..

4-மேற்கத்திய ,மிதவாத முஸ்லீம் மக்களும் ,கிருஸ்தவர்களும் அதிகமாக வாழ்கின்றனர்.இவர்களிடம் தன்னை நேரடியாகவே மதச்சார்போ,,அடிப்படை முஸ்லீமாகவோ இல்லாத நபராகக் காட்டி பிரச்சாரம் செய்தார்..

இந்த மூன்று தரப்பினருக்கும் பொறுத்தும் வகையில் தனது கதாபாத்திரத்தை அரங்கேற்றினார்.ஊழலும்,,வறுமையும் ,,குடும்ப ஆட்சியும் எல்லை மீறிய நிலையில் வெறுப்படைந்த ,மக்களிடம் இவரது செயற்பாடு அங்கீகாரத்தை இலகுவாக பெறுவதற்கு காரணமானது.

அதேநேரம் இந்தியா ஆசியாக் கண்டத்தில் அதிகாரமிக்கதாக இருப்பதையும் ,,மத்திய கிழக்கில் துருக்கி போன்ற நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புச் செயற்பாடுகளையும் முடக்க பாகிஸ்தான் சிறந்த தளமாகும்.கடந்த காலங்களில் ஆட்சி செய்த இருகட்சிகளும் அமெரிக்க சார்பாக இருந்தாலும் மக்கள் எதிர்ப்பாகவே இருந்தனர்.

இந்த நிலையில் தன்னை எதிர்த்த மக்களிடம் ,தனக்கு விருப்பமான புதிய நபரை உருவாக்கி அமெரிக்கா இதில் அதிகளவு அர்ப்பணம் செய்தது..இதற்காக இம்ரான் கான் கட்சியை உள்நாட்டிலும் ,வெளிநாட்டிலும் வளர்க்க பல உதவிகளைச் செய்தது.இதனை இம்ரான் கானின் உயர்மட்ட தலைவர்கள் சிலர் அறிந்துள்ளனர்.இருந்தும் இருபறியில் இருக்கின்ற இந்திய எல்லைப் பிரச்சினையை அமெரிக்காவின் உதவியுடன் மட்டுமே முடிக்க முடியும் எனநம்புகின்றனர்.

இருந்தும் பாகிஸ்தானின் இராணுவ சபையை மீறி இம்ரான்கானினால் ஒன்றும் புரிய முடியாது.அப்படி மீறினால் ஆட்சிக் கவிழ்ப்பு  அல்லது தூக்கு மேடைக்கு இம்ரான் பழியாகலாம்.

மிகவும் சவால்மிக்கதாகவே அமையும். ஏனெனில் தொங்கு பாராளுமன்றம் ஒருபுறம்,,,மறுபுறம் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் இராணுவம்...இவற்றுடன் அமெரிக்க சார்பான தனது கொள்கையை இராஐதந்திர மூலமாக முன்னெடுப்ப்பது...
ஆட்சி மாற்றமும் பின்புலமும் ஆட்சி மாற்றமும் பின்புலமும் Reviewed by Vanni Express News on 7/27/2018 03:57:00 PM Rating: 5