புகையிரதங்களில் யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடை

-அரசாங்க தகவல் திணைக்களம்

புகையிரதங்களில் யாசகம் எடுப்பதற்கும் அநாவசியமாக நடமாடுவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புகையிரத பயணிகள் எதிர்நோக்கும் பல்வேறு இம்சைகள் மற்றும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார். 

இந்த தீர்மானத்திற்கு அமைய அடுத்த வரும் ஒரு வார காலத்திற்குள் புகையிரதங்களில் இருந்து பிச்சைக்காரர்களும் யாசகம் கேட்போரும் அகற்றப்படுவர். 

இவர்கள் தொடர்ந்தும் புகையிரதங்களில் பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு.அபேவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார். 
புகையிரதங்களில் யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடை புகையிரதங்களில் யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடை Reviewed by Vanni Express News on 7/01/2018 11:22:00 PM Rating: 5