புற்றுநோய் மரபணுவை நீக்கி இரட்டை குழந்தைகள் பெற்ற பெண்

பெங்களூரை சேர்ந்தவர் ஸ்வயம் பிரபா (37). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் உடல் பரிசோதனை செய்தார். அப்போது மார்பக புற்றுநோய் உருவாகும் மரபணு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 

எனவே இந்த புற்றுநோய் தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடிவு செய்தார். அதற்காக தெற்கு மும்பையில் உள்ள வைத்தியசாலையில் டொக்டர் பிருஷாபரிக் என்பவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

அப்போது தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவத்துவம் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுத்தும் மரபணுவை பிரித்து எடுக்க முடியும் என தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளாக அதற்கான சிகிச்சை மேற்கொண்டார். 

மார்பக புற்றுநோய் ஏற்படுத்தும் மரபணு முற்றிலும் அகற்றப்பட்ட நிலையில் அவருக்கு சோதனை குழாய் முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்யப்பட்டது. 

அதைத்தொடர்ந்து கடந்த 2 ஆம் திகதி ஸ்வயம் பிரபாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவை மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு இல்லாமல் பிறந்தன. இதனால் ஸ்வயம் பிரபாவும் அவரது கணவர் தெபாஷிஸ் பனிகிராகியும் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து ஸ்வயம் பிரபா கூறும்போது, ´எனது தாயார் அவரது தங்கைகள் மற்றும் உறவினர்கள் பலர் புற்றுநோயாளிகளாவர். அந்த மரபணு எனது சகோதரிகளின் குழந்தைகளுக்கும் பரவியது. அந்த நிலையில் எனது குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது. நோய் நொடி அற்றவர்களாக இருக்க வேண்டும் என விரும்பினேன். 

அதற்கான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு தற்போது ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்து இருக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது´ என்றார். 

இத்தகைய மருத்துவ முறையில் குழந்தைகள் பிறந்து இருப்பது இந்தியா வில் இதுவே முதல் முறை யாகும். 

மார்பக புற்றுநோய் மரபணு நீக்கி குழந்தைகள் உருவாக்கிய டொக்டர் பரிக் கூறும்போது, ´மரபணு கோளாறு காரணமாக உலகம் முழுவதும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பல நோய்களுடன் பிறந்துள்ளன. இத்தகைய மருத்துவ வசதியை பெற்றால் நோய்களுடன் குழந்தை பிறப்பதை தடுக்க முடியும்´ என்றார்.
புற்றுநோய் மரபணுவை நீக்கி இரட்டை குழந்தைகள் பெற்ற பெண் புற்றுநோய் மரபணுவை நீக்கி இரட்டை குழந்தைகள் பெற்ற பெண் Reviewed by Vanni Express News on 7/29/2018 05:31:00 PM Rating: 5