செட்டிகுளத்தில் சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில் நேர்முகத்தேர்வு

-அனஸ் அன்வர் | சர்ஜான் மொஹமட் 

செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 20 கிராமங்களிலுள்ள சமுர்தி பயனாளிகளின் குடும்பங்களிலுள்ள ,கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்விப்பொதுத்தராதர சாதாரணப்பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வுகள் நேற்று செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

உதவிப்பிரதேச செயலாளர் கே.முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நேர்முகத்தேர்வில் சுமார் 100க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த மாணவர்களுக்கு சாதாரணதரப்பரீட்சையில் பெற்ற சித்திகளின் அடிப்படையின் புள்ளிகள் வழங்கப்படுவதுடன் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மேலதிக புள்ளிகள் வழங்கப்பட்டுத் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதாந்தம் 1500 ரூபாய்கள் பணம் வழங்கப்படவுள்ளது.

இந்த நேர்முகத்தேர்வில் மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக செட்டிகுளம் மஹா சங்க தலைமைபீட முகாமையாளர் என் சுசீந்திர ராஜா மற்றும் பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சி. சண்முகானந்தன் உட்படச் சமுத்தி வங்கியின் முகாமையாளர்களான எஸ்.சிவகுமார், வடிவேல் ராஜகுகன் ஆகியோருடன் வெங்கலச்செட்டிக்குளம் மகாவித்தியாலய அதிபர் உட்படப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செட்டிகுளத்தில் சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில் நேர்முகத்தேர்வு செட்டிகுளத்தில் சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில் நேர்முகத்தேர்வு Reviewed by Vanni Express News on 7/13/2018 03:34:00 PM Rating: 5