தொண்டையில் ரம்புட்டான் சிக்கி ஆறு வயது சிறுவன் பலி - ஆலங்குடாவில் சம்பவம்

-செய்தியாளர் சப்ராஸ்

இன்று கல்பிட்டி, ஆலங்குடா பகுதியில் ரம்புட்டான் தொண்டையில் சிக்கி ஆறு வயது சிறுவன் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்வம் இன்று இரவு ஒன்பது மணியளவில் நடைபெற்றுள்ளது தொண்டையில் சிக்கி ரம்புட்டானை மீட்பதற்காக ஆலங்குடாவில் உள்ள  வைத்தியரிடம் கொண்டுசென்ற வேளையில் மரணித்து உள்ளார். 

ஆலங்குடா பகுதி தற்போது சோகத்தில் காணப்படுவதாக வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

சிறிய பிள்ளைகளிடம் ரம்புட்டனை கொடுக்கும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பல்லவா ?

அந்த ஆறு வயது சிறுவனுக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தைக் கொடுப்பானாக! ஆமீன்!!!
தொண்டையில் ரம்புட்டான் சிக்கி ஆறு வயது சிறுவன் பலி - ஆலங்குடாவில் சம்பவம் தொண்டையில் ரம்புட்டான் சிக்கி ஆறு வயது சிறுவன் பலி - ஆலங்குடாவில் சம்பவம் Reviewed by Vanni Express News on 7/02/2018 10:48:00 PM Rating: 5