தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு வேட்பாளர் உட்பட 85 பேர் பலி

தென் மேற்கு பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் மாகாண சபை வேட்பாளர் ஒருவர் உட்பட 85 பேர் கொல்லப்பட்டதாகவும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த மாகாண சுகாதார அமைச்சர் பைசல் காக்கத் தெரிவித்துள்ளார். 

புதிதாகத் தொடங்கப்பட்ட பலுசிஸ்தான் அவாமி கட்சி வேட்பாளர் நவாப்ஜாதா சிராஜ் ரைசானியின் தேர்தல் கூட்டத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மாஸ்துங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதல் குவெட்டா என்ற இடத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு வேட்பாளர் உட்பட 85 பேர் பலி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு வேட்பாளர் உட்பட 85 பேர் பலி Reviewed by Vanni Express News on 7/13/2018 11:20:00 PM Rating: 5