விளையாட்டு மைதானத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

கிரிபத்கொட, ஹுனுபிட்டிய, டிங்கியாவத்த விளையாட்டு மைதானத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (29) இரவு இடம்பெற்ற இசை நிகழ்வொன்றின் போது இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்ததன் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தாக்கதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞனை கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

கடவத பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு மைதானத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை விளையாட்டு மைதானத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை Reviewed by Vanni Express News on 7/30/2018 03:44:00 PM Rating: 5