பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கான் முன்னிலை

பாகிஸ்தான் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் முன்னிலை வகிக்கிறார். 

ஆனால், வாக்கு எண்ணிக்கையில் பெரியளவில் மோசடி நடப்பதாக அரசியல் போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து நேற்று தேர்தல் நடைபெற்றது. 

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. எனினும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கூறுகிறது. 

272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும். 

இந்நிலையில், 114 தொகுதிகளில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின்தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 57 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கான் முன்னிலை பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கான் முன்னிலை Reviewed by Vanni Express News on 7/26/2018 03:29:00 PM Rating: 5