வலி வடக்கு மயிலிட்டித்துறையில் அதிகளவான மீன்களை பிடிக்கும் மீனவர்கள்

-பாறுக் ஷிஹான்

வலி வடக்கு மயிலிட்டித் துறையில் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளதுடன் பிடிபடும் மீன்களை அவ்விடங்களில் வைத்தே விற்பனை செய்து வருகின்றனர்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட  குறித்த பகுதியில் அதிகமான மீனவக் குடும்பங்கள் தமது ஜீவனோபாயத் தொழிலை விருப்புடன் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள்   மீன்களை பிடித்து வெளி இடங்களில் உள்ள  சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன் பிடிக்கப்படுகின்ற இடங்களிலே வைத்து கொள்வனவு செய்ய வருகின்ற அயலூர் தொழிலாளர்களுக்கும் மலிவான விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
வலி வடக்கு மயிலிட்டித்துறையில் அதிகளவான மீன்களை பிடிக்கும் மீனவர்கள் வலி வடக்கு மயிலிட்டித்துறையில் அதிகளவான மீன்களை பிடிக்கும் மீனவர்கள் Reviewed by Vanni Express News on 7/02/2018 04:53:00 PM Rating: 5