மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - சரத் பொன்சேகா

மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி தீர்மானிப்பது பொருத்தமானது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு இவ்வாறான தண்டனை வழங்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கம் சரியான முறையில் அணி வகுத்தால், பொதுமக்களும் சரியான வழியில் அணி வகுப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - சரத் பொன்சேகா மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - சரத் பொன்சேகா Reviewed by Vanni Express News on 7/30/2018 02:55:00 PM Rating: 5