ஒரே நாளில் தகர்க்கப்பட்ட மெஸ்சி, ரொனால்டோவின் உலக கிண்ண கனவு

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன. 

நேற்று நடைபெற்ற முதல் நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ், லியோனல் மெஸ்சி தலைமையிலான ஆர்ஜெண்டினா அணியை வீழ்த்தியது. 

இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் உருகுவே, கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையினான போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது. 

உலக அளவில் அதிக ரசிகர்கள் கொண்ட வீரர்கள் என்றால் அது மெஸ்சி மற்றும் ரொனால்டோவாக தான் இருக்க முடியும். இவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்ற பட்டத்தை மாறி மாறி கைப்பற்றி வருகின்றனர். 

அவர்கள் அணிகள் நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்றால் நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால் மெஸ்சி மற்றும் ரொனால்டோவின் அணிகள் ஒரே நாளில் தோல்வியடைந்து உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. இதனால் இரு வீரர்களின் உலகக் கிண்ண கனவு தகர்க்கப்பட்டுள்ளது. 

இது அவர்கள் இருவரின் ரசிகர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக் கிண்ண தொடர்தான் தான் இவர்கள் இருவரும் விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என கூறப்படுகிறது.
ஒரே நாளில் தகர்க்கப்பட்ட மெஸ்சி, ரொனால்டோவின் உலக கிண்ண கனவு ஒரே நாளில் தகர்க்கப்பட்ட மெஸ்சி, ரொனால்டோவின் உலக கிண்ண கனவு Reviewed by Vanni Express News on 7/01/2018 05:29:00 PM Rating: 5