அதிக கோல்கள் அடித்து பிரேசில் அணி சாதனை

88 ஆண்டு கால உலக கிண்ண கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை பிரேசில் அணி நேற்று படைத்தது.

மெக்சிகோவுக்கு எதிரான 2வது சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி 2 கோல் அடித்தது. இதன் மூலம் அந்த அணி உலக கோப்பையில் மொத்தம் 228 கோல்கள் அடித்து இருக்கிறது. 

இதற்கு முன்பு ஜெர்மனி அணி 226 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரேசில் அணி தகர்த்து புதிய சாதனையை உருவாக்கியது. 

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் நேற்று ஒரு கோல் அடித்தார். பிரேசில் அணிக்காக 89வது போட்டியில் ஆடிய அவர் அடித்த 57வது சர்வதேச கோல் இதுவாகும். ஒட்டுமொத்த உலக கிண்ண போட்டி தொடரில் அவர் அடித்த 6வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக கோல்கள் அடித்து பிரேசில் அணி சாதனை அதிக கோல்கள் அடித்து பிரேசில் அணி சாதனை Reviewed by Vanni Express News on 7/04/2018 01:11:00 AM Rating: 5