மீண்டும் பழைய விலைக்கே எரிபொருளை விற்பனை

முன்னர் இருந்த விலைக்கே எரிபொருள் விற்பனை செய்யுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 

எரிபொருள் நிரப்பு நிலையங்களிடம் நாம் வினவிய போது இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்ததுடன், லங்கா ஐஓசி நிறுவனம் இன்று காலை முதல் எரிபொருள் விலையை அதிகரித்தது. 

இந்நிலையில் மீண்டும் பழைய விலைக்கே எரிபொருளை விற்பனை செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பழைய விலைக்கே எரிபொருளை விற்பனை மீண்டும் பழைய விலைக்கே எரிபொருளை விற்பனை Reviewed by Vanni Express News on 7/06/2018 03:37:00 PM Rating: 5