வெலிமடை முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் 50வது ஆண்டு விழா

-க.கிஷாந்தன்

வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட வெலிமடை முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் 50வது ஆண்டு விழா நிறைவு நாள் நிகழ்வு  நேற்று வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

வெலிமடை முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லீம் கலை, கலாசார நிகழ்வுகளுடன், பரிசளிப்புகளும், கௌரவிப்புகளும் இடம்பெற்றதுடன், வித்தியாலயத்தின் கடந்தகால பதிவுகள் அடங்கிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர, மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வெலிமடை முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் 50வது ஆண்டு விழா வெலிமடை முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் 50வது ஆண்டு விழா Reviewed by Vanni Express News on 7/01/2018 05:48:00 PM Rating: 5