அன்பின் இஸ்லாமிய உறவுகளே இந்த பள்ளிவாசலுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்களா ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரஹாத்துஹூ  அன்பின் இஸ்லாமிய உறவுகளே வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகம்  உங்களுடன் சிறு நிமிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தர முடியுமா ?

இலங்கையில் கிழக்கு மாகணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் தைக்காவீதியில் அமைத்துள்ள வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயல் மிகவும் பின் தங்கிய பிரதேசத்தில் அமைத்துள்ள மிகவும் பழமையானதும் மைய்யவாடியை கொண்டதுமாகும்.

இப்பள்ளிவாயலுக்கு எவ்வித நிரந்தர வருமானமும் இன்றி மகல்லாவாசிகளின் சிறிய சந்தாவின் மூலம் இயங்குகின்றது.

இம்மகல்லாவாசிகள் ,அயல் சிரிய கிராமத்தை உள்ளடக்கியதாக மக்களின் தேவை கருதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அனுமதியுடன் சுமார் 5 வருடங்களுக்கு மேல் ஜூம்ஆ தொழுகையை நிறை வேற்றப்பட்டுவருகின்றது .

இப்பள்ளிவாயல் மிகவும் பழமையானதாகவும்  இடப்பற்றாக்குறையால்  வெயில், மழை காலங்களில் வெளியிலும், உள்ளோயும் பாரிய சிரமத்திற்கு மத்தியில் தொழுகை நடை பெறுகின்றது.

தற்போது உள்ள  பள்ளிவாயலை  இப்பகுதி மக்களின் மார்க்க விடயங்களை வளர்ச்சி அடைய செய்வதற்கு அல்குர்ஆன் மதர்சாவாகவும் பயன்படுத்த திட்டம் இட்டுள்ளது .

இப்பள்ளிவாயல் அவ்வாறு இருக்க ஏறாவூர் புதிய ஜூம்ஆ பள்ளிவாயல் என்ற பெயரில்  Eravur New Jumma Masjith கட்டுமாண பணிகளை ஆரம்பிக்க திட்டம் இட்டுள்ளோம் .

அந்த வகையில் பின்வரும் விடயங்கள் செய்ய வேண்டி உள்ளது.

01. பள்ளிவாயலுக்கும் மைய்யவாடிக்கும் இடையில் எல்லை மதில் அமைத்தல்.

02. பள்ளிவாயல் அமையும் காணி , மைய்யவாடிகாணி சீர் செய்ய மணல் இட்டு நிரப்புதல்.

03. ஜனாசா வாகனத் தரிப்பிடத்தை இடம் மாற்றம் செய்து தரிப்பிடம் அமைத்தல்

இவ்வாறான விடயங்கள் பள்ளிவாயல் அமைப்பதற்கு சீர் செய்வதன் மூலம் ஆரம்ப வேலையாக அமையும் இதற்கு முடியுமானவர்கள் தங்களின் உதவிகளை வழங்குகள்.

 இவ்வேலைகளை செய்ய ரூபாய் 10லட்சம் தேவை ஒருமணல் டிப்பர் 5000.00 பொருளாகவோ, பணமாவே வழங்கி உதவ முடியும்.

இவ்வாறான வேலை திட்டம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மை 

01. இறை இல்லம் அமைய ஆரப்பித்தல் .

02. அல்குர்ஆன் மதர்ஸாவிக்கு இடம் வழங்க உதவுதல்.

உங்களால் முடிந்த உதவி வழங்கி இம்மைக்கும்  மறுமைக்கும் சேர்த்துக்கொள்ள அருமையான சந்தர்ர்ப்பம் உங்களையும் இணைத்துக் கொள்ள முன் வாருங்கள். 

நிருவகம் 
வாளியப்பா ஜூம்ஆ 
ஏறாவூர் 
0094775392419
அன்பின் இஸ்லாமிய உறவுகளே இந்த பள்ளிவாசலுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்களா ? அன்பின் இஸ்லாமிய உறவுகளே இந்த பள்ளிவாசலுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்களா ? Reviewed by Vanni Express News on 7/01/2018 12:33:00 AM Rating: 5