தாயின் இரண்டாவது கணவரை வெட்டி கொலை செய்த நபருக்கு மரண தண்டனை


-பாறுக் ஷிஹான்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரை வெட்டி கொலை செய்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து இன்று (3) திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். 

திருகோணமலை, ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.எச்.சமீர லக்மால் எனும் 38 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியில் கடந்த 2011 ஆம் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி தனது தாயின் இரண்டாவது கணவரை கொலை செய்த குற்றத்திற்கே குறித்த நபருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபருக்கெதிராக திருகோணமலை உயர் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கின் போது குற்றவாளியாக இனங்கண்டு இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் திருகோணமலையில் வழங்கிய முதலாவது தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. 
தாயின் இரண்டாவது கணவரை வெட்டி கொலை செய்த நபருக்கு மரண தண்டனை தாயின் இரண்டாவது கணவரை வெட்டி கொலை செய்த நபருக்கு மரண தண்டனை Reviewed by Vanni Express News on 7/03/2018 10:39:00 PM Rating: 5