காரைநகர் பிரதேச செயலகத்தால் போதைக்கு எதிரான பேரணி - Photos

-பாறுக் ஷிஹான்

போதைப்பொருள் தடுப்பு தேசிய வாரத்தை முன்னிட்டு காரைநகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (03) காலை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

காரைநகர் பிரதேச செயலகத்தில் இருந்து, உதவித் திட்டமிடல் பணிப்பளர் வீ.சிவகுமார் தலைமையில் ஆரம்பமான இப்பேரணி காரைநகர் கதிர்வேலாயுதசுவாமி ஆலயம் வரை சென்று முடிவடைந்தது.

இப்பேரணியில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், காரைநகர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டவர்கள் போதைக்கு எதிரான கோஷங்கள் எழுதப்பட்ட சுலோகங்களைத் தாங்கியிருந்தனர்.

பேரணி முடிவில், கதிர்வேலாயுதசுவாமி ஆலய வளாகத்தில் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. இதில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வீ.சிவகுமார், போதைப்பொருள் தடுப்புக் குழுவின் வளவாளரான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.பாஸ்கரகுரு, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய சார்ஜன்ட் உபாலி, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி ச. கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர்.

யாழ். மாவட்டத்தில் போதைக்கு அடிமையானோரால் பல்வேறு சமூக விரோதச் செயல்கள், வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுவரும் நிலையில் இப்பேரணி நடத்தப்பட்டுள்ளமை சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காரைநகர் பிரதேச செயலகத்தால் போதைக்கு எதிரான பேரணி - Photos காரைநகர் பிரதேச செயலகத்தால் போதைக்கு எதிரான பேரணி - Photos Reviewed by Vanni Express News on 7/03/2018 11:27:00 PM Rating: 5