அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

-பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பத்து பள்ளிவாசல்களின் திருத்த வேலைகளுக்காக சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் 50 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

அந்த பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகள்  பிரதி அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி,நிந்தவூர் மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசல்,நிந்தவூர் மஸ்ஜிதுல் காஸிமி பள்ளிவாசல்,நிந்தவூர் மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்ஆ பள்ளிவாசல்,நிந்தவூர் மஸ்ஜிதுல் புர்கான் பள்ளிவாசல்,நிந்தவூர் ஜாமியுத் தஹ்ஹீத் பள்ளிவாசல்,ஒலுவில் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல்,பாலமுனை தானே அல்-புசைரி ஜூம்ஆ பள்ளிவாசல்,பொத்துவில் ரஹ்மானியா நகர் பள்ளிவாசல்,இறக்காமம் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் மாவடிப்பள்ளி புதிய ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகிய பத்து பள்ளிவாசல்களுக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதி தற்போது பிரதி  அமைச்சரால் அம்பாறை அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேற்படி பள்ளிவாசல்களுக்கு தலா ஐந்து ரூபா லட்சம் வீதம் பகிந்தளிக்குமாறு பிரதி அமைச்சரால் அரச அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு Reviewed by Vanni Express News on 7/19/2018 10:48:00 PM Rating: 5