நானாட்டான் வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட - பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்

-ஊடகப்பிரிவு

பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவரும் நானாட்டான் ஆதார வைத்தியசாலையின் அவலநிலையை நேரில் சென்று பார்வையிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடி யேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் வைத்தியசாலையின் அவல நிலையைக் கண்டு வேதனைப்பட்டதுடன் மாகாண சுகாதார அமைச்சருடன் இணைந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக குறிப்பிட்டார்.

இன்று காலை நானாட்டனுக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சரை சந்தித்த அப்பகுதி மக்கள் தமது பல்வேறு தேவைப்பாடுகளை கெளரவ பிரதி அமைச்சருக்கு எடுத்துக் கூறி அவற்றை பூர்த்தி செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதன் போது நானாட்டான் வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை தளபாடங்களின்மை கட்டிடப் பற்றாக்குறை களுடன் மகப்பேற்றுப் பிரிவின் குறைபாடுகள் தொடர்பிலும் கெளரவ பிரதி அமைச்சரிடம் தமது ஆதங்கங்களை வேதனையுடன் கொட்டிக் தீர்த்தனர்.

இதனால் நோயாளிகள் பெரும் இன்னல்களை அநுபவிப்பதாகவும் இதனை தீர்த்து வைக்க யாரும் இதுவரை முன்வரவில்லையெனவும் மக்கள் மேலும் விசனம் தெரிவித்தனர். 

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் மன்னார் மாவட்டத்தில் வைத்தியத்துறையானது மிகவும் பின்தங்கிய நிலையிலிருப்பதற்கு பல்வேறு பட்ட காரணங்கள் இருக்கின்றன.
இதற்கு அரசியல் வாதிகள் அதிகாரிகளின் அசமந்த போக்குகளும் முக்கியமானதாக இருக்கின்றன. மக்களுடைய தேவைகளில் வைத்திய சேவையானது இன்றியமையாததாகும்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுடன் மருத்துவ வசதிகளும் சேவைகளும் உயர் நிலையை எய்தியுள்ள இக்காலத்தில் எமது பிரதேச மக்கள் அடிப்படையான மருத்துவத் தேவைகளுக்கே அங்கலாய்க்கின்ற அவலநிலையை மிகவும் வேதனையுடனே நோக்க வேண்டிள்ளது.
இந்நிலைக்கான காரணங்களை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை பெற்றுத் தர வேண்டிய தார்மீகக் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளான எம்மைச் சார்ந்திருக்கிறது.

இவ் வைத்தியசாலையில் நிலவும் பல்வேறுபட்ட குறைபாடுகளையும்  உடனடியாக தீர்த்து வைக்க நான் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனவும் கெளரவ பிரதி அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார். 

அமைச்சரின் இவ்விஜயத்தின் போது நானாட்டான் பிரதேச சபை  தவிசாளர் திரு.பரஞ்சோதி மற்றும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நானாட்டான் வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட - பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் நானாட்டான் வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட - பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் Reviewed by Vanni Express News on 7/14/2018 05:17:00 PM Rating: 5