விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ

போதைப் பொருளில் இருந்து இந்த நாட்டு அடுத்த தலைமுறையினரை பாதுகாத்துக் கொள்வதற்காக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

தற்போது நாட்டிற்குள் மிக வேகமாக போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேநேரம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தவறான உருவத்தை மக்களுக்கு காண்பிக்க அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். 

சீன மக்கள் விடுதலை முன்னணி படையின் 91 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீன தூதுவராலயம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றிருந்தார். 

அந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ Reviewed by Vanni Express News on 7/24/2018 05:20:00 PM Rating: 5