அமெரிக்காவில் இல்லாத ஊடக சுதந்திரம் இன்று இலங்கையில்

ராஜபக்ஷ ஆட்சியை போன்று பாதாள உலகு குழுவுடன் தொடர்பில் இருந்த வேறு எந்த ஆட்சியையும் வரலாற்றில் காணமுடியாது என்று அமைச்சர் மங்கள் சமரவீர் தெரிவித்துள்ளார். 

மாத்தறையில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மாத்தறை சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற ஆயுதங்கள் பிரபல அரசியல்வாதி ஒருவருடையது என பரவும் செய்திக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தனக்கு ஆயுதங்களுடன் எவ்வித கணக்கு வழக்குகளும் இல்லை என நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவிற்கு கூட இல்லாத ஊடக சுதந்திரம் இன்று இலங்கையில் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 
அமெரிக்காவில் இல்லாத ஊடக சுதந்திரம் இன்று இலங்கையில் அமெரிக்காவில் இல்லாத ஊடக சுதந்திரம் இன்று இலங்கையில் Reviewed by Vanni Express News on 7/01/2018 11:52:00 PM Rating: 5