முச்சக்கர வண்டி சாரதிகளை சுற்றூலாத்துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி சுற்றூலாத்துறையில் ஒன்றிணைப்பதற்காக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழான பயிற்சி வேலைத்திட்டம் நாளை திங்கட்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமாகவிருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தொழில் பயிற்சி அதிகார சபையின் தலல்ல தேசிய மத்திய நிலையத்தில் நேற்று காலை நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர உரையாற்றினார். 
120 நாட்களில் நிர்மாணத்துறையில் திறன்மிக்க சிற்பிகளை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டப்பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எத்தகைய கல்வித் தரத்தை கொண்டிருந்த போதிலும், பயிற்சியில் இணைந்து கொள்வதற்கு அது தடையாக அமையாது என்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

120 நாட்களில் நிர்மாணத்துறையில் திறன்மிக்க சிற்பிகளை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டப்பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முச்சக்கர வண்டி சாரதிகளை சுற்றூலாத்துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம் முச்சக்கர வண்டி சாரதிகளை சுற்றூலாத்துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம் Reviewed by Vanni Express News on 7/29/2018 06:04:00 PM Rating: 5