தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிர் அவர்களின் ஏற்பாட்டில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு - 2018

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில்,தரம் 5 ல் கல்வி பயிலும், புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவிருக்கின்ற, பிள்ளைகளுக்கான இலவச கருத்தரங்கு நடாத்தப்பட்டது. அதில் மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குள்ள பாடசாலைகளில் இருந்து 456 பிள்ளைகள் கலந்துக் கொண்டனர். அவர்களுக்கு உரிய அத்தனை விடயங்களையும் , முடிந்தளவு செய்து கொடுக்கப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் இப்படியான ஒரு நிகழ்வை இலங்கையில் உள்ள எந்த பிரதேச சபையின் தவிசாளரும் செயற்படுத்த வில்லை. 

இலங்கையில் இருக்கின்ற ஒன்பது மாகாணங்களிலும் அமைந்துள்ள 330 க்கு மேற்பட்ட பிரதேச சபைகளிலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இன்று நடைபெற்ற கருத்தரங்கில் சிறந்த தேர்ச்சி மிக்க வளவாளரைக் கொண்டு,பயிற்சியளிக்கப்பட்டதோடு 456 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சை வழிகாட்டி கைநூல் மற்றும் வினா தொகுப்புகள் அடங்கிய வினாப்பத்திரங்கள் அவர்களுக்கான சிற்றுண்டி வழங்கப்பட்டது இப்படியான நிகழ்வை ஏற்பாடு செய்து தந்த தவிசாளருக்கு மன்னார் பிரதேச சபை மக்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றனர் இவருடைய சேவைகள் துடிதுடிப்புடன் அமைய வல்ல இறைவன் துணை புரிவானாக!

இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு உதவிய கௌரவ தவிசாளர் SHM  முஜாஹிர் அவர்கள் தனது உரையில் குறிப்பிடும் போது, எதிர்காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக முடிவெடுத்திருப்பதாகவும், எதிர்காலத்தில் தன்னால் முடிந்ததை நிச்சயமாக அனைத்து மாணவர்களுக்கும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் அவர்களின் அனுசரணையுடன் அவருடைய ஆலோசனையின் பேரிலும், அவருடைய கருத்துக்களை உள்வாங்கி கல்விக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்றும்,அதனை திறம்பட செயல்படுத்துவேன் என்றும் ,அனைத்து மாணவர்களும் பரீட்சையில் சிறந்த பெருபேறு பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் ,கோட்டக்கல்விப்பணிப்பாளர் ,,மௌலவி , பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,மற்றும் பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் கலந்துக் கொண்டனர், இக்கருத்தரங்கு மாணவர்களுக்கு பிரயோசனமாக அமைந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு Reviewed by Vanni Express News on 7/24/2018 04:07:00 PM Rating: 5