haiiii

நல்லாட்சி ஏற்படுத்திய நல்லிணக்கம் என்ன என்பதை முழு நாடே அறியும் - நாமல் ராஜபக்‌ஷ

இலங்கையில் இணங்களுக்கு இடையே இடம்பெற்ற  அனைத்து  பாரிய இனமோதல் சம்பவங்களுக்கு பின்னணியிலும் ஐக்கிய தேசிய கட்சியின் சதியே  இருந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில், 

1983 க்கு பிறகு முதல் முறையாக நல்லாட்சியில்  இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் ஏற்றப்பட்டுள்ளது என  பிரதமர் கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இணங்களுக்கு இடையேயான அனைத்து பாரிய   வன்முறைகளுக்கும் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சியே இருந்துள்ளது என்பதை நாம் அவருக்கு இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் கருபுள்ளியாக அமைந்த கருப்பு ஜூலை கலவரம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றது. இதனை  அப்போதய ஐக்கிய தேசிய கட்சி அரசு கட்டுப்படுத்தாமல் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது. அதுமட்டுமல்லாமல் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியே இந்த வண்முறைகளை தூண்டிவிட்டதும் தெளிவானது என்பதை நாம் பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

கடந்த மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் கடைசித்தருவாயில் திட்டமிட்ட அலுத்கமை கலவரம் இடம்பெற்றது.அந்த கலவரத்தை காட்டி ஆட்சிக்கு வந்த இந்த நல்லாட்சி அரசு கலவரம் நடந்து நான்கு வருடங்கள் கடந்தும் இதுவரை எந்த ஒரு விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை.

நாமும் பல தடவைகள் அலுத்கமைக்கு விசாரணை கமிஷன் ஒன்றை நியமிக்க கோரிய போதும் நான்கு வருடங்கள் கழிந்தும் அரசு அதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை.ஆகவே அலுத்கமை கலவரமும் இந்த அரசாங்காத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

மேலும் இந்த அரசாங்க காலத்தில் நல்லிணக்கம் ஏற்பட்டதாக கூறும் பிரதமர்  கடந்த 3 வருடங்களில் இணங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயற்பட்ட விதம் தொடர்பிலும் இணங்களுக்கு இடையே  இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு செயற்பட்ட விதம் தொடர்பில் நாம் தெளிவுபடுத்த தேவையில்லை அதனை மக்கள் மன்றத்தின் தீர்ப்பிற்கே விடுகிறோம்.

ஊழலை ஒழித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகவும் இணங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் பெயிலாகிவிட்டது என அவர் குறிப்பிட்டார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4809,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11039,கட்டுரைகள்,1388,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3206,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2075,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: நல்லாட்சி ஏற்படுத்திய நல்லிணக்கம் என்ன என்பதை முழு நாடே அறியும் - நாமல் ராஜபக்‌ஷ
நல்லாட்சி ஏற்படுத்திய நல்லிணக்கம் என்ன என்பதை முழு நாடே அறியும் - நாமல் ராஜபக்‌ஷ
https://3.bp.blogspot.com/-y_RGe70Bfik/W12E9z1WD3I/AAAAAAABNgs/fzZcQZgI9-0q1Pu9f_T72yZWxOYAqaptwCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://3.bp.blogspot.com/-y_RGe70Bfik/W12E9z1WD3I/AAAAAAABNgs/fzZcQZgI9-0q1Pu9f_T72yZWxOYAqaptwCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/07/namal_29.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/07/namal_29.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy