ஜனாதிபதியையும் பிரதமரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் நோட்டீஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் மற்றுமொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாகவே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக, போலி ஆவணங்களை வெளியிட்டமையால், இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் செயற்பட்டதாக, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதில், மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியையும் பிரதமரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் நோட்டீஸ் ஜனாதிபதியையும் பிரதமரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் நோட்டீஸ் Reviewed by Vanni Express News on 7/24/2018 05:41:00 PM Rating: 5