கைது செய்யப்பட்ட இளைஞர்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தம்


பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை தாக்கிய குற்றச் சாட்டின் பேரில் இங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். 

இங்கிரிய, கொஸ்ஹேன பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவரை நேற்று முன்தினம் (28) இரவு பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்திருந்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மதுபோதையில் தாக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தம் கைது செய்யப்பட்ட இளைஞர்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தம் Reviewed by Vanni Express News on 7/30/2018 03:35:00 PM Rating: 5